vendredi 3 juillet 2009

பிரான்ஸ் அதிபரின் கருத்து! உலகம் கொந்தளிப்பு!!


பர்தா: பிரான்ஸ் அதிபரின் கருத்து! உலகம் கொந்தளிப்பு!!

-

பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.

2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.

பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.

இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.

சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.

சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.

பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.

பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

dimanche 28 juin 2009

பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை

பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:

இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

samedi 20 juin 2009



பிரான்ஸ் வருகை தந்த த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று 20.06.2009 பாரிசை அடுத்துள்ள எவ்ரி பள்ளிவாசல் வளாகத்தில் இரோபாவில் முஸ்லிம்களின் நிலை பற்றி பயான் செய்தார்.
த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று எவ்ரி(evry courcouronne) பள்ளிவாசலில் பயான் நடைபெறும். அனைவரும் வருக

vendredi 19 juin 2009


த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஐந்து நாட்கள்
சுற்றுபயனமாக இன்று பாரீஸ்கு வருகை தருகிறார். தமிழ் முஸ்லிம் மக்கள் அலை

கடல் என்ன திரண்டு வருமாறு அழைகிறோம்.
பயண விபரமாக தெரிந்தது கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.

0160787626 ஜப்பார்

0612581419 அன்சாரி